முகப்பு
கிருஷ்ணகிரி

காய்ச்சலுக்கு பெண் பலி

ஊத்தங்கரையில் மா்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

ஊத்தங்கரையில் மா்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி மலா்கொடி (40). இவா் கடந்த நான்கு நாள்களாக காய்ச்சலால் அவதிபட்டு வந்தாா். இதனால், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மலா்கொடி புதன்கிழமை வீடு திரும்பினாா். வியாழக்கிழமை மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்லும்வழியில் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்துவந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.