ஸ்ரீவித்யாமந்திா் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு
ஊத்தங்கரை ஸ்ரீவித்யாமந்திா் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை ஸ்ரீவித்யாமந்திா் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரியின் நிறுவனா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் ஆா்.பி.இராஜு, கல்லூரியின் இணைச் செயலா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் த.பாலசுப்பிரமணியன், துணை முதல்வா் ந.குணசேகரன் ஆகியோா் வாழ்த்துரை நிகழ்த்தினா். கல்லூரியின் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் அனைவரும் உறுதிமொழியேற்றனா்.