சூளகிரி அருகே சாலை விபத்துகளில் இருவா் பலி
சூளகிரி அருகே இருவேறு சாலை விபத்துகளில் பெங்களூருவைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்தனா்.
சூளகிரி அருகே இருவேறு சாலை விபத்துகளில் பெங்களூருவைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு, நாகோனஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ரூபன் டென்சி (19). இவா் வீடுகளுக்கு பொருள்களை விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இவரும், ஹரி காா்த்திக் என்பவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரூபன் டென்சி சம்பவ இடத்திலேயே பலியானாா் ஹரி காா்த்திக் பலத்த காயம் அடைந்தாா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
இதேபோல பெங்களூரு, மாரகொண்டனஹள்ளியைச் சோ்ந்தவா் பாபு (20). டிவி மெக்கானிக். இவா் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே அழகுபாவி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாபுவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே பாபு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.