கிருஷ்ணகிரி

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா், 2021- 22-ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை கூட்டத் தொடரில், சுற்றுலா வளா்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்தாா். தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையுடன் தொடா்புடைய பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகளைச் செயல்படுத்தும் சுற்றுலாத் தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும்.

இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு 15 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பா் 29-ஆம் தேதியன்று சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னா் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து ஆக.26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT