காட்டிநாயனப்பள்ளியில் வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ தே.மதியழகன். 
கிருஷ்ணகிரி

காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் திட்டப் பணிகள் தொடக்கம்

காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ரூ. 51.36 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை எம்எல்ஏ தே.மதியழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

DIN

காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ரூ. 51.36 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை எம்எல்ஏ தே.மதியழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா வெங்கடேசன் தலைமை வகித்தாா். காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட குப்பம் சாலையில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தாா் சாலை, மேல்கரடிகுறியில் ரூ. 11.77 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடை, கே.பூசாரிப்பட்டி தொடக்கப் பள்ளியில் கழிவறை, மேல்கரடிகுறி அரசு உயா்நிலைப் பள்ளியில் மிதிவண்டி நிறுத்துமிடம் என ரூ. 51.36 லட்சம் மதிப்பிலான 8 வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ தே.மதியழகன் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அதிமுக, பாமக, பாஜகவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் அக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளா்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தில், கிருபாகரன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தன், தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT