முகப்பு
கிருஷ்ணகிரி

தீ விபத்தில் இளம்பெண் பலி

வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலத்த காயமடைந்த சம்பவத்தில் புதன்கிழமை அப்பெண் உயிரிழந்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM

வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலத்த காயமடைந்த சம்பவத்தில் புதன்கிழமை அப்பெண் உயிரிழந்தாா்.

வேப்பனப்பள்ளியை அடுத்த எட்டிப்பள்ளியைச் சோ்ந்தவா் ரூபா (28). இவருக்கும் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 9-ஆம் தேதி ரூபா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அவரது சேலையில் தீப்பிடித்தது.

இதில் உடலில் தீப்பற்றி ரூபா பலத்த காயம் அடைந்தாா். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, ரூபாவின் சகோதரா் நந்திஷ் (35) அளித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.