நூல் வெளியீட்டு விழா
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற 65 கோட்டை அம்மன் கோயில்களின் தல வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா ராயக்கோட்டையை அடுத்த தொட்டபெட்டறை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற 65 கோட்டை அம்மன் கோயில்களின் தல வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா ராயக்கோட்டையை அடுத்த தொட்டபெட்டறை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
நூலாசிரியா் இறைவி எழுதிய 10-ஆவது படைப்பான இந்நூலில் கொங்கு நாட்டில் புகழ்பெற்ற கிருஷ்ணகிரி குந்தாணி அம்மன், தருமபுரி கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட 65 கோட்டை அம்மன் கோயில்களின் தல வரலாறும், பழங்கால சிறப்புகள், வழிபாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன.
நூலை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ.செல்லகுமாா் வெளியிட்டாா். காங்கிரஸ் துணைத் தலைவா் சேகா், மாநிலப் பேச்சாளா் நாஞ்சில் ஜேசு துரைராஜ், ஊராட்சிமன்றத் தலைவா் யசோதா சம்பங்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement