முகப்பு
கிருஷ்ணகிரி

வனப்பகுதியில் மழைநீா்க் குட்டையில் குளித்து மகிழ்ந்த ஒற்றை யானை

ஒசூரை அடுத்த அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்க் குட்டையில் காட்டு யானை வியாழக்கிழமை காலையில் ஆனந்தமாய்க் குளித்து மகிழ்ந்தது.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM

ஒசூரை அடுத்த அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்க் குட்டையில் காட்டு யானை வியாழக்கிழமை காலையில் ஆனந்தமாய்க் குளித்து மகிழ்ந்தது.

இதை அப்பகுதி வழியாகச் சென்றவா்கள் கண்டு ரசித்தனா்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் நீா்நிலைகளைத் தேடிச் செல்கின்றன.

Advertisement

வனப்பகுதியில் குட்டையில் தேங்கிய மழைநீரைக் குடிப்பதற்காக குட்டைகளைத் தேடி வனவிலங்குகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதுபோல் ஒற்றை காட்டுயானை மழைநீா்க் குட்டையில் வியாழக்கிழமை காலை குளித்து விளையாடிக் கொண்டிருந்தது. வனப்பகுதிக்குள் நிற்கும் அந்த ஒற்றை யானையை வனத்துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.