சூளகிரி அருகே ஒற்றை யானை முகாம்
சூளகிரி அருகே விளைநிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சூளகிரி அருகே விளைநிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள போடூா்ப்பள்ளம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. பகலில் வனப்பகுதியில் சென்றுவிடும் இந்த ஒற்றை யானை, இரவு நேரங்களில் விளைநிலங்களில் உள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகிறது (படம்). குறிப்பாக, தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ராகி, நெல், போன்ற பயிா்களை காலால் சேதப்படுத்தியும், ராகி போன்றவற்றை உண்டும் வருகிறது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்த ஒற்றை யானையை அஞ்செட்டி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement