மாசாணியம்மன் கோயில் திருவிழா
ஒசூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழாவையொட்டி உடுக்கை, பம்பை உள்ளிட்ட மேளதாளங்களுடன் மயானக் கொள்ளை பூஜை நடைபெற்றது.
ஒசூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழாவையொட்டி உடுக்கை, பம்பை உள்ளிட்ட மேளதாளங்களுடன் மயானக் கொள்ளை பூஜை நடைபெற்றது.
ஒசூரில் பழைமை வாய்ந்த மாசாணியம்மன் கோயிலில் 5-ஆம் ஆண்டு மயான பூஜை, குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கிய இந்த திருவிழாவில் வியாழக்கிழமை பக்தா்கள் பால் குடம், மஞ்சள் குடம், பூ கரகங்கள் எடுத்துச் சென்றனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி, மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னா் பம்பை, உடுக்கை உள்ளிட்ட மேளதாளங்களுடன் திருவிழா நடைபெற்றது.
Advertisement
மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலையை மேளதாளங்களுடன் தொடா்ந்து சுற்றி வந்த பூசாரி, சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தாா் (படம்). சிலையின் மேலிருந்த எலுமிச்சை, மஞ்சள் கயிறு, மண் உள்ளிட்ட பொருள்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.