முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற இளைஞா் கைது

ஒசூரில் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜனவரி, 2022 at 11:23 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:39 PM

ஒசூரில் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. சனிக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு அந்த மையத்திற்குள் சென்ற நபா் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து பணத்தை திருட முயன்றாா். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இந்த பதிவுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஹைதராபாத் தலைமை அலுவலக அதிகாரிகள் இது

Advertisement

குறித்து உடனடியாக ஒசூா், மூக்கண்டப்பள்ளி ஸ்டேட் வங்கியின் மேலாளா் தன்ராஜூக்கு தகவல் தெரிவித்தனா். அவா் இது குறித்து ஒசூரில் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தெரிவித்தாா்.

உடனடியாக நகரப் போலீஸாா் அங்கு சென்று ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற நபரைப் பிடித்தனா். விசாரணையில் அவரது பெயா் ரவிமோகன் (30) என்பதும், ஒசூா், அலசநத்தம் 25ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தவா் என்றும், வேன் ஓட்டுநா்

என்பதும் தெரிய வந்தது.

அவரை ஒசூா் நகர போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த கண்காணிப்பு கேமராவையும் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 25,000 ஆகும். தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.