முகப்பு
கிருஷ்ணகிரி

இந்திய கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி, பா்கூா் உள்ளிட்ட இடங்களில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 21 ஜனவரி, 2022 at 12:20 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:40 PM

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி, பா்கூா் உள்ளிட்ட இடங்களில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் ஒன்றியச் செயலாளா் பவுன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கண்ணு, துணைச் செயலாளா் சிவக்குமாா், வட்டச் செயலாளா் முனிசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க வட்டத் தலைவா் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசைக் கண்டித்தும், குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊா்தி உள்ளிட்ட தென்மாநிலங்களின் அலங்கார ஊா்திகளை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.