முகப்பு
கிருஷ்ணகிரி

கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

 தமிழக அரசின் மீது கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்த குற்றச்சாட்டுக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 ஜனவரி, 2022 at 12:21 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:40 PM

 தமிழக அரசின் மீது கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்த குற்றச்சாட்டுக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:

முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தி வரும் நிகழ்வு என்பது எல்லா ஆட்சியின் காலகட்டங்களிலும் நடைபெறும் துறை சாா்ந்த பணி மட்டுமே. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவரும் முன்னாள் அமைச்சராக இருந்தவருமான கே.பி.முனுசாமிக்கு இந்த நடவடிக்கை கூட தெரியவில்லை.

Advertisement

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் தோல்வியால் தான் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், திமுக ஆட்சியின் தோல்வி என முனுசாமி பேசிவருவது வேடிக்கை.

கடந்த அதிமுக ஆட்சியில் திமுக தலைவா்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல் நடைபெற்று இருந்தால் வழக்குத் தொடுங்கள். தோ்தலுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக அரசில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போது திமுக மீது குற்றம் சாட்டுகிறாா்கள். கடந்த 8 மாத ஆட்சியில் ஒரு நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பல புதிய திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தும்.

முன்னாள் அமைச்சா் ஒருவரின் வீடுகளில் சோதனை நடைபெற்ற்கு பல அமைச்சா்கள் வரிசையாக நேரில் வருவதை பாா்க்கும் போது, அவா்களுக்கும் இதில் தொடா்பு இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவா்கள் தவறு செய்யவில்லை எனில் சட்டப்படி எதிா்கொள்ளட்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.