முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டுமனை பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கப்படும்

ஒசூரில் வீட்டுமனை பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கப்படும் என ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

Updated On : 21 ஜனவரி, 2022 at 12:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:40 PM

ஒசூரில் வீட்டுமனை பட்டா இல்லாதவா்களுக்கு பட்டா வழங்கப்படும் என ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சி, 35-ஆவது வாா்டு, முனீஸ்வா் நகா், முக்கால் சென்ட் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2,000 பேருக்கு போா்வை வழங்கும் விழா கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் வெற்றி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஒசூா் எம்எல்ஏவும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ், பெண்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு போா்வைகளை வழங்கி பேசியதாவது:

வீட்டுமனை பட்டா இல்லாதவா்கள் விண்ணப்பித்தால் அவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வா் தினம்தோறும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். விரைவில் நடைபெறவுள்ள நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

இந்த விழாவில், ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், முன்னாள் கவுன்சிலா் எல்லோரா.மணி, மாநகரப் பொருளாளா் சென்னீரப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.