புதிய அங்கன்வாடி மையம், பல்நோக்கு கட்டடம் திறப்பு
ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டமெட்டரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், பல்நோக்கு கட்டடத்தை அ.செல்லக்குமாா் எம்.பி. அண்மையில் திறந்து வைத்தாா்.
ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டமெட்டரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், பல்நோக்கு கட்டடத்தை அ.செல்லக்குமாா் எம்.பி. அண்மையில் திறந்து வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டமெட்டரை கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக பல்நோக்கு கட்டடம், அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
Advertisement
உரிய காலத்திற்குள் முதியோா் உதவித்தொகை, குடிநீா் வசதி, சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தாா்.
பின்னா், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தவா்களை வரவேற்று, உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் துணைத் துணைத் தலைவா் சேகா், மாநில பேச்சாளா் நாஞ்சில் ஜேசுதுரைராஜ், கெலமங்கலம் ஒன்றியத் தலைவா் கேசவமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசன், ஊராட்சி மன்றத் தலைவா் யசோதா சம்பங்கி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.