இந்திரா நகரில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்
பா்கூா் அருகே உள்ள இந்திரா நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM
பா்கூா் அருகே உள்ள இந்திரா நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதி மூலம் பா்கூரை அடுத்துள்ள பட்டலப்பள்ளி ஊராட்சியில் உள்ள இந்திரா நகா், ஆதிதிராவிடா் காலனியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கழிவுநீா்க் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வள்ளிபெருமாள் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள், முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement