எருதுவிடும் விழாவில் பங்கேற்க கரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
கரடிகுறி கிராமத்தில் ஜன. 22-ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் என விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.
கரடிகுறி கிராமத்தில் ஜன. 22-ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெறும் எருதுவிடும் திருவிழாவில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் என விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரியை அடுத்த கரடிகுறி கிராமத்தில் நடைபெறும் எருதுவிடும் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள எருது உரிமையாளா்கள் கரோனா தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, விழா குழுவின் பதிவு சான்றிதழ் (டோக்கன்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
Advertisement
மேற்கண்டவற்றில் எது ஒன்று இல்லையென்றாலும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என தெரிவித்தனா்.