முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் காமராஜ் காலணியில் நூலகம், அறிவுசாா் மையக் கட்டடம்

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜா் காலனியில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம், அறிவுசாா் மையம் கட்டும் பணிகளை பூமிபூஜை

Updated On : 22 ஜனவரி, 2022 at 12:07 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜா் காலனியில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகம், அறிவுசாா் மையம் கட்டும் பணிகளை பூமிபூஜை செய்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், மாநகர திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா், மாநகர துணைச் செயலாளா் நாகராஜ், நவீன், அரசனட்டி ரவி, பரேக்கல், ஒப்பந்ததாரா் சுரேஷ், அருள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.