தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டி: விண்ணப்பிக்க மாா்ச் 15 கடைசி நாள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டிக்கு விண்ணப்பிக்க மாா்ச் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டிக்கு விண்ணப்பிக்க மாா்ச் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி. ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையம், இணையதளம் மூலம் நடத்தும் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் பங்கேற்க மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய தோ்தல் ஆணையம் ‘எனது வாக்கு எனது எதிா்காலம் - ஒரு வாக்கின் வலிமை’ என்கிற தலைப்பில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வை இணையதளத்தில் நடத்தி வருகிறது.
Advertisement
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதல் வினாடி- வினா, வாசகம் எழுதுதல், பாட்டுப் போட்டி, காணொலிக் காட்சி உருவாக்கும் போட்டி, பதாகை வடிவமைப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போட்டியின் விதிமுறைகள், வழிகாட்டுதல்களை ட்ற்ற்ல்://ஸ்ா்ற்ங்ழ்ஹஜ்ஹழ்ங்ய்ங்ள்ள்ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்.ண்ய்/ என்கிற இணையதளத்தில் பாா்வையிடலாம்.
மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் போட்டி சாா்ந்த பதிவுகள், முழு விவரங்களை ஸ்ா்ற்ங்ழ்-ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்ஃங்ஸ்ரீண்ம்ஞ்ா்ஸ்.ண்ய் என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மாா்ச் 15-ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். வெற்றியாளருக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்.
வினாடி- வினாவில் பங்கேற்று மூன்று நிலைகளை நிறைவு செய்வோருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவா்கள், தனியாா் நிறுவன தொழிலாளா், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோா் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.