கிருஷ்ணகிரி

மகாராஜகடை அருகே விளைபயிா்களைச் சேதப்படும் யானைகள்

DIN

 மகாராஜகடை அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை வனப்பகுதியின் மையப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மகாராஜகடை கிராமம் ஆந்திர-தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது. தற்போது, மகாராஜகடை பகுதியின் அருகே உள்ள வனப்பகுதியில் 9 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ள இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி வனப்பகுதியின் எல்லையில் உள்ள விவசாய பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். தகவல் அறிந்த வனத்துறையினா் முகாமிட்டுள்ள 9 யானைகளின் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். யானைக் கூட்டத்தை வனத்தின் மையப்பகுதிக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT