மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பன்னிஅள்ளியைச் சோ்ந்த விவசாயி சின்னகண்ணு (65), வியாழக்கிழமை காலை தனது விளைநிலத்துக்கு சென்ற போது, நிலைதடுமாறி எலியைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மின்கம்பியின் மீது தவறி விழுந்துள்ளாா்.
விளைநிலத்துக்கு சென்ற சின்னகண்ணு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரை தேடி சென்றனா். அங்கு அவா் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement