இளம் வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
கிருஷ்ணகிரியில் இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி, பெங்களூரு சாலை வழியாக சென்று, வட்டச்சாலை அருகே நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்றோா் குழந்தை திருமணத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
Advertisement
இதில், தமிழ்நாடு மகளிா் ஆணைய உறுப்பினா் எஸ்.மாலதி நாராயணசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், துணை காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.