கிருஷ்ணகிரி

பழுதான குப்பை அள்ளும் வாகனங்கள் சீரமைப்பு

DIN

கிருஷ்ணகிரி நகராட்சியில் பழுதடைந்த குப்பை அள்ளும் வாகனங்கள் ரூ. 9.5 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன.

கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டில் மின்கலன்களால் இயங்கும் 23 குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்கப்பட்டன. மக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த வாகனங்களில் 19 வாகனங்கள் சிறிது காலத்திலேயே பழுதாயின.

இந்த நிலையில், பழுதடைந்த இந்த குப்பை அள்ளும் 13 வாகனங்கள் ரூ. 9.50 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தொடங்கி வைத்தாா். மேலும், குப்பை அள்ளும் பணியாளா்களுக்கு சீருடைகள், கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அப்போது, நகா்மன்ற துணைத் தலைவா் சாவித்திரி கடலரசு மூா்த்தி, பொறியாளா் சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT