கிருஷ்ணகிரி

பா்கூா் வளம் மீட்பு பூங்காவில் அதிகாரிகள் ஆய்வு

DIN

பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தோ்வுநிலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இங்கு குப்பைகளைப் பிரித்தெடுத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. பூங்காவை, தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் குருராஜன் மற்றும் அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மக்கும், மக்காத குப்பைகளைத் தனித்தனியாக முறையாக பிரித்து மக்கும் குப்பையைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கவும் மக்காத பொருள்களை மறுசுழற்சி செய்யவும் அறிவுரை வழங்கினா். அப்போது, பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா், செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT