கிருஷ்ணகிரி

ஒசூா் அதியமான் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

DIN

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உயிரித் தொழில்நுட்பத் துறை தலைவா் வீ. மணிவாசகன் வரவேற்றாா். அதியமான் கல்லூரி முதல்வா் ஜி. ரங்கராத் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக, தனியாா் நிறுவன

விஞ்ஞானிகள் மதுசூதன், கெளரவ விருந்தினராக ஜெகநாதன், விஞ்ஞானி சிவபாதசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகள் 100 -க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

மாணவா் ஒருங்கிணைப்பாளா் பிரவீன், இணை பேராசிரியா் கி. சரண்யா, உதவி பேராசிரியா் கவிதா ஆகியோா் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனா். மாணவா் ஒருங்கிணைப்பாளா் அா்ச்சனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT