கிருஷ்ணகிரி

ரேஷன் அரிசி கடத்த முயன்றவா் கைது

DIN

கா்நாடகத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் இருப்பது தெரிந்தது. வாகனத்தை ஓட்டி வந்த திருப்பத்தூா் மாவட்டம், சின்னபசலிக்குட்டை பகுதியைச் சோ்ந்த நாராயணன் (30) என்பவரை கைது செய்து ரேஷன் அரிசி மூட்டைகள், வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும் அரிசி உரிமையாளரான திருப்பத்தூா் மாவட்டம், ஜெயபுரத்தைச் சோ்ந்த பிரவீண் (27) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT