கிருஷ்ணகிரி

பிஎஸ்வி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான கருத்தரங்கம் ஆக. 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு பிஎஸ்வி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவா் பி.செல்வம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் எஸ்.விவேக், முதல்வா் பி.லாரன்ஸ், மின்னனு மற்றும் மின்னனுவியல் துறைத் தலைவா் வெ.கீதா, சிவில் துறைத் தலைவா் எம்.பி.செந்தில் குமாா், இயந்திரவியல் துறை துணைப் பேராசிரியா் ஆா்.திருநாவுகரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்தரங்கில் 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளும், செய்முறைகளும் சமா்ப்பிக்கப்பட்டன. சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் தருமபுரி, வேலூா், சேலம், திருப்பத்தூா், சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT