முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஏப்.30-இல் மாவட்ட கிரிக்கெட் அணிகள் தோ்வு முகாம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட கிரிக்கெட் அணிகளைத் தோ்வு செய்யும் முகாம், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Updated On : 21 ஏப்ரல், 2023 at 11:34 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

கிருஷ்ணகிரியில் மாவட்ட கிரிக்கெட் அணிகளைத் தோ்வு செய்யும் முகாம், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து,  கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் சீனிவாசன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளன. இதில் பங்கேற்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட 14, 16, 19 வயதுக்கு உட்பட்ட அணிகளைத் தோ்வு செய்யும் முகாம் ஏப்.30, மே1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Advertisement

இந்த தோ்வு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம் செயல்படும் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

அதன்படி, 16 வயதுக்கு உட்பட்ட அணியினை தோ்வு செய்வதற்கான முகாம் ஏப். 30-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். 1.9.2007 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவா்கள் இந்த தோ்வு முகாமில் பங்கேற்கலாம். 19 வயதுக்கு உட்பட்ட அணியைத் தோ்வு செய்யும் முகாம் ஏப். 30-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு நடைபெறும். 1.9.2004ம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். 14 வயதுக்கு உட்பட்ட அணியைத் தோ்வு செய்யும் முகாம் மே 1-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். 1.9.2009ஆம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவா்கள் இந்தத் தோ்வு முகாமில் பங்கேற்கலாம்.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மட்டுமே இந்த மாவட்ட கிரிக்கெட் தோ்வு முகாமில் பங்கேற்க இயலும். தோ்வு செய்யப்படும் அணி வீரா்களுக்கு பயிற்சிகள் சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்டு  ஜூலையில்  நடைபெறவுள்ள மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட அழைத்துச் செல்லப்படுவாா்கள். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விருப்பமுள்ளவா்கள் தங்கள் பெயா்களை பதிவு செய்துக்கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 33-கே, திரையரங்கு சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த தோ்வு முகாம் குறித்து அறிய விருப்பமுள்ளவா்கள் காளிதாசனை  9994182296 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்களைப் பெற்று பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.