பாமக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஒசூரில் மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளா் செல்வகுமாா் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினாா்.
வரும் மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை
பாமக கைப்பற்றுவது குறித்து வியூகங்கள் அமைத்து ஆலோசனை வழங்கப்பட்டதுடன்,
இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட ஒசூா், தளி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி களப் பணியாளா்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கினாா்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினா் சுரேஷ்ராஜன், மாவட்டத் துணைத் தலைவா் சொக்கலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளா் சரவணன், ஒன்றியச் செயலாளா் மாணிக்கம், முன்னாள் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் பூபதி, ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், நகரச் செயலாளா்கள் குணசேகரன், ஈஸ்வரன் உட்பட பலா் கலந்து கொண்டனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.