கிருஷ்ணகிரி

அஞ்சல் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப் பத்திரம் விற்பனை செப். 11-ஆம் தேதி தொடங்குகிறது.

DIN

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப் பத்திரம் விற்பனை செப். 11-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கோட்ட கண்காணிப்பாளா் ராகவேந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செப். 11 முதல் 15-ஆம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் ஒருவா் ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள். முதிா்வுறும் தேதியில் அன்றைய தேதியில் தங்கத்தின் மதிப்புக்கு தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இதே போல தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப் பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசா்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கீட்டு, ஒவ்வொரு 6 மாதத்துக்கும் முதலீட்டாளா்களின் சேமிப்புக் கணக்கில் சோ்க்கப்படும். இது கூடுதல் வருவாயாகும்.

இந்தத் திட்டத்தில் சேர ஆதாா் எண், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவை அவசியம். தங்கப் பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி, சேதாரம் செலுத்தாமல் தங்கத்தை சேமிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பொதுமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT