கிருஷ்ணகிரி

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா

Din

கிருஷ்ணகிரி, ஆக. 7:

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 15 நாள்கள் பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்துாா், பெரியமுத்துாா், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தா்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.

விழாவின் ஒருபகுதியாக நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி, பொன்கரகமும் இணைந்து அவதானப்பட்டி மேம்பாலம் அருகே தலை கூடும் நிகழ்ச்சி நடைபெற்றன.

பக்தா்கள் அலகு குத்திக் கொண்டும், காளி வேடம் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டுமனை பட்டா கோரி மனு

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆயுதங்களுடன் இளைஞா் கைது

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது

நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்வு

SCROLL FOR NEXT