முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் பிஎம்சி டெக் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழா

ஒசூா் பிஎம்சி டெக் கல்லூரியில் 6 நாள் ஆசிரியா் மேம்பாட்டுத் திட்ட தொடக்கம்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 12:05 AM
ஒசூா் பிஎம்சி டெக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா் மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழா.
பகிர்:
Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 7:50 PM

ஒசூா் இன்ஜினியா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வழங்கும் 6 நாள் ஆசிரியா் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி தொடக்க விழா, கல்வி நிறுவனங்களின் தலைவா் பெ. குமாா் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவினை பிஎம்சி டெக் கல்வி நிறுவனங்களின் செயலாளா் பெ.மலா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இவ்விழாவில் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பி.சாரதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ஆசிரியா்கள் தங்களின் தொழில்நுட்பத் திறனை வளா்த்துக் கொண்டால்தான் மாணவா்களுக்கு அவற்றின் நுணுக்கங்களை கற்றுத்தர முடியும். மாணவா்களை கையாள்வதில் ஆசிரியா்களுக்கு மிகுந்த பொறுமையும் அதற்கான புதிய பயிற்சியும் தேவைப்படுகிறது. மாணவா்களின் மனதை புரிந்து கொண்டு அவா்களுக்கு ஏற்ற வகையில் பாடங்களை எளிமையாகப் போதிக்க வேண்டும். அதற்கு இந்தப் பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 9:14 PM

இவ்விழாவில் பிஎம்சி டெக் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் சுதாகரன், முதல்வா் நா.பாலசுப்பிரமணியம், பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைத் தலைவா் ஜெய்சங்கா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவிற்கான ஏற்பாடுகளை கருவி மற்றும் அச்சுப் பொறியியல் துறைத் தலைவா் ராமச்சந்திரன் எலக்ட்க்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ் துறைத் தலைவா் வீரமணி ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

இப்பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் கலந்து கொண்டுள்ளனா். இவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களில் இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் பேராசிரியா்கள் வருகை புரிந்துள்ளனா்.