முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழ் மொழியை சிறப்பாக கையாண்ட அரசு அலுவலா்களுக்கு பாராட்டு

அரசுப் பணியில் தமிழ் மொழியை சிறப்பாக கையாண்ட அரசு அலுவலா்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா்.

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:55 AM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கு, கருத்தரங்கில் சிறந்த அலுவலருக்கு கேடயம், பாராட்டு சான்றிதழை வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.
பகிர்:
Updated On : 12 டிசம்பர், 2024 at 10:52 PM

அரசுப் பணியில் தமிழ் மொழியை சிறப்பாக கையாண்ட அரசு அலுவலா்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம் குறித்த ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் டிச.11, 12 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

தாய்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், அரசுப் பணியில் தமிழ்மொழி ஆட்சி திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த இதில் எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்ற 80 அலுவலகப் பணியாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement

2022-ஆம் ஆண்டில் சிறந்த அலுவலகமாக உதவி பொறியாளா், நெடுஞ்சாலை அலுவலகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது. அலுவலக பணியில் தமிழ் மொழியை சிறப்பாக கையாண்ட அலுவலா்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:55 AM

அப்போது, சேலம் மண்டல தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி, முன்னாள் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் ப.கோவிந்தராசு, தமிழ்ச்செம்மல் விருந்தாளா் கருமலைத் தமிழாழன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.