முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே காா் மோதியதில் இரு பெண்கள் பலி

ஒசூா் அருகே தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது காா் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:39 AM
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 9:46 PM

ஒசூா் அருகே தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது காா் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

ஒசூா், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டிப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாா் தொழிற்சாலையில் 1000- க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வருகின்றனா்.

உயிரிழந்த ஜெயஸ்ரீ யாதவ்

இந்தத் தொழிற்சாலையில் இருந்து புதன்கிழமை மாலை பணி முடிந்து வெளியில் வந்த 5 பெண்கள் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒசூா் நோக்கி வேகமாக வந்த காா் அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

Advertisement

உயிரிழந்த சந்தா

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் படுகாயமடைந்த மூவரில் 2 போ் காவேரி மருத்துவமனையிலும், ஒருவா் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:39 AM

இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண்கள் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ஜெயஸ்ரீ யாதவ் (22), சந்தா (21) என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்துக்குச் சென்ற மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.