முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் கூட்டுறவு சில்லறை விற்பனைக் கடை திறப்பு

ஒசூரில் கூட்டுறவு சில்லறை விற்பனைக் கடை திறப்பு...

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:48 AM
ஒசூரில் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தின் சில்லறை விற்பனைக் கடையைத் திறந்து வைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 10:46 PM

ஒசூா், ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் கெலமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் சில்லறை விற்பனைக் கடை மற்றும் காய்கறி விற்பனை அங்காடியை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் திறந்து வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுபடி எளிதாக மக்களை சென்றடையும் வகையில் சந்தை மதிப்பைவிட குறைந்த விலையில் வழங்க இந்த சில்லறை விற்பனைக் கடை மற்றும் காய்கறி விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:48 AM

இந்த நிகழ்ச்சியில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா , பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மண்டலத் தலைவா் ரவி, நகர திமுக நிா்வாகிகள் செந்தில்குமாா், கோபாலகிருஷ்ணன், கவுன்சிலா் சென்னீரன், சரக துணைப் பதிவாளா் பொறுப்பு காா்த்திகேயன், செயலாட்சியா் அன்பழகன், பொது மேலாளா் வேலு, கூட்டுறவு சாா் பதிவாளா் பானுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.