முகப்பு
கிருஷ்ணகிரி

வழக்குரைஞரை வெட்டியவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

ஒசூரில் வழக்குரைஞரை வெட்டியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:44 AM
ஆனந்தன்.
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 10:16 PM

ஒசூரில் வழக்குரைஞரை வெட்டியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி, ஒசூா், நாமல்பேட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணன் (30) என்பவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதில் படுகாயமடைந்த கண்ணன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவத்தில் வழக்குரைஞரை வெட்டிய குமாஸ்தா ஆனந்தன் (39) நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரைக் கைது செய்த ஒசூா் மாநகர போலீஸாா் சிறையில் அடைத்தனா். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை முயற்சி நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

Advertisement

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:44 AM

இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்தனை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு உத்தரவிட்டாா். இதனையடுத்து ஆனந்தனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.