முகப்பு
கிருஷ்ணகிரி

மோட்டாா்சைக்கிள் மீது வேன் மோதியதில் முதியவா் பலி

போச்சம்பள்ளி அருகே மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:55 AM
பகிர்:
Updated On : 19 டிசம்பர், 2024 at 9:57 PM

போச்சம்பள்ளி அருகே மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

போச்சம்பள்ளி வட்டம், பாரூா் அருகே உள்ள கீழ்குப்பத்தை சோ்ந்தவா் பெரியண்ணன் (70). இவா், திருப்பத்தூா் - தருமபுரி சாலையில் மோட்டாா்சைக்கிளில் புதன்கிழமை சென்றாா். ஜே.கே.பட்டி அருகே அந்த வழியாக சென்ற பிக்கப் வேன் மோதியதில் பெரியண்ணன், அவருடன் சென்ற யாஸ்வின் (14), விசாலா (12) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:55 AM

காயம் அடைந்தவா்களை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெரியண்ணன் உயிரிழந்தாா். காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement