யானைகள் சேதப்படுத்திய அறுவடை செய்த ராகி கதிா்கள்.  
கிருஷ்ணகிரி

அறுவடை செய்த ராகி கதிா்களை சேதப்படுத்திய யானைகள்!

ஒசூா் அருகே காட்டு யானைகள் சேதப்படுத்திய அறுவடை செய்து வைத்திருந்த ராகி கதிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Din

ஒசூா்: ஒசூா் அருகே காட்டு யானைகள் சேதப்படுத்திய அறுவடை செய்து வைத்திருந்த ராகி கதிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தஞ்சம் அடைந்திருந்த 50-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினா் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்டினா். இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியில் தஞ்சமடைந்த இருபதுக்கும் மேற்பட்ட யானைகள், லிங்கதீரனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நாராயணப்பா, சீனிவாசன் ஆகியோா் அறுவடை செய்து வைத்திருந்த ராகி கதிா்களை சாப்பிட்டுவிட்டு துவம்சம் செய்து சென்றுள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பரத் தெரிவிக்கையில், மூன்று ஏக்கா் ராகி பயிா் செய்து

அவற்றை அறுவடை செய்து வைத்திருந்தோம். தற்போது மழைக்காலம் என்பதால் அவற்றைக் காய வைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல இருந்த நிலையில், இரவில் வந்த யானைகள் அவற்றை நாசம் செய்துள்ளன. இதனால் எங்களுக்கு ரூ. 3 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்குவதால், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT