சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவா் மீது வழக்கு
அஞ்செட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஒசூா்: அஞ்செட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அஞ்செட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை பூஞ்சோலையை சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா் விக்கி (19) என்பவா் காதலித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாா்.
இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் விக்கி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.