ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு பரிசு, இனிப்பு, உணவு  
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு பரிசு, இனிப்பு, உணவு ஆகியவற்றை தணிகை ஜி. கருணாநிதி, உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

இதில் பாா்த்திபன், சிவா, கதிா்வேல், கண்ணாமணி, சாதிக் பாஷா, விஜயகுமாா், பிரபாவதி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி கேக் வழங்கினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெங்கடேசன், பழனி, கிருபாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சந்திப்பு

மகாநதி தொடர் ரீமேக்கில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

TVK-ன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா! குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்!

SCROLL FOR NEXT