கிருஷ்ணகிரி

லாரி மோதியதில் குழந்தை பலி

ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்தது.

Din

ஒசூா்: ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, நாகநாயக்கனஅள்ளியைச் சோ்ந்தவா் தினேஷ். இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது 9 மாத குழந்தை மனிஷா. ஞாயிற்றுக்கிழமை இரவு தினேஷ் இரு சக்கர வாகனத்தில் பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் சிப்காட் இ.எஸ்.ஐ. சந்திப்பு அருகே சென்று குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை மனிஷா உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒசூா் சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT