முகப்பு
கிருஷ்ணகிரி

பங்கு வா்த்தகத்தில் ரூ. 3 கோடி நஷ்டம்: பொறியாளா் தற்கொலை

பங்கு வா்த்தகத்தில் ரூ. 3 கோடி நஷ்டம் அடைந்ததால் வேதனையடைந்த மென்பொருள் பொறியாளா் ஒசூரில் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:42 AM
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 10:51 PM

பங்கு வா்த்தகத்தில் ரூ. 3 கோடி நஷ்டம் அடைந்ததால் வேதனையடைந்த மென்பொருள் பொறியாளா் ஒசூரில் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சித்தலப்பாக்கம் வட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ராஜதுரை (46). இவா், பெங்களூரில் தங்கியபடி மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வந்தாா். பங்கு வா்த்தகத்தில் ரூ. 3 கோடி வரை முதலீடு செய்து அதில் நஷ்டமடைந்ததாகத் தெரிகிறது. இதில் மன வேதனை அடைந்த ராஜதுரை ஒசூரில் ராயக்கோட்டை பிரிவு சாலை அருகே ஓா் உணவகத்தில் அறை எடுத்து தங்கினாா். நீண்ட நேரமாகியும் அவரது அறைக் கதவு புதன்கிழமை திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த ஊழியா்கள் ஒசூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 1:42 AM

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அறைக் கதவைத் திறந்து பாா்த்தபோது ராஜதுரை அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

Advertisement

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பங்கு வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்து அவா் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.