முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் போராட்டம்

சென்னை, கிண்டி அரசு மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரியும் ஒசூரில் அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:46 AM
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 8:36 PM

சென்னை, கிண்டி அரசு மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரியும் ஒசூரில் அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் அரசு மருத்துவா் கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ஒசூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவா்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

அப்போது அரசு மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவா்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், காலி மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:46 AM

இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு மருத்துவா்களின் பற்றாக்குறையே காரணம் என்பதால் காலி மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது கோரிக்கை விடுத்தனா்.