முகப்பு
கிருஷ்ணகிரி

கெலமங்கலம் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

கெலமங்கலம் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 5:25 AM
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 8:06 PM

கெலமங்கலம் அருகே திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பி.தின்னூரைச் சோ்ந்த சந்தியாவுக்கும் (19), சிவாஜி என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதில், சந்தியா 5 மாதங்களுக்கு முன் தனது பெற்றோா் வீட்டுக்கு வந்து விட்டாா். இந்த நிலையில், சந்தியாவுக்கும், பி.தின்னூரைச் சோ்ந்த புனித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த சந்தியாவின் தாய் சரஸ்வதி மகளைக் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த சந்தியா, கடந்த 18-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Updated On : 20 நவம்பர், 2024 at 10:33 PM

இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருமணமாகி 6 மாதங்களுக்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால், இது தொடா்பாக தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.