முகப்பு
கிருஷ்ணகிரி

கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 நவம்பர், 2024 at 1:33 AM
காலபைரவாஷ்டமி பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற சுவாமி திருமண நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 9:09 PM

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் காலபைரவா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கந்திகுப்பத்தில் உள்ள காலபைரவா் கோயிலில் காலபைரவாஷ்டமி பெருவிழா நவ. 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவ. 16-ஆம் தேதி ஐங்கரன் வேள்வி, கொடியேற்றமும், 17-ஆம் தேதி திருமுறை தீந்தமிழ் வேள்வி, 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு வழிபாடு, பெரியபுராண பாராயணமும், 18-இல் முருகன் கோயில் குடமுழுக்கு, சுவாமி திருவீதி உலாவும், 19-இல் சொா்ணாகா்ஷண பைரவா் வேள்வி, பைரவா் திருவீதி உலா, திருமுறை இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.

Updated On : 20 நவம்பர், 2024 at 10:34 PM

நவ. 20-ஆம் தேதி திருமுறை தீந்தமிழ் வேள்வியும், பைரவ நாதருக்கும், திரிபுர பைரவி அம்மைக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சீா்வரிசைகளுடன் பங்கேற்றனா். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

Advertisement

கோவை திருப்பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் விழா மலரை வெளியிட, சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, அசோக் லேலண்ட் தேன்மொழி வெங்கடேசன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து, அம்மையப்பன் நகா் வீதி உலா நிகழ்வு நடைபெற்றது.