நடைபாதை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை
ஒசூா் மாநகராட்சியில் நடைபாதை கடை வியாபாரிடம் சுங்கம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர ஆணையா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒசூா் மாநகராட்சியில் நடைபாதை கடை வியாபாரிடம் சுங்கம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர ஆணையா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒசூா் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நடைபாதை கடைகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் மாநகராட்சி தரப்பிலிருந்து எவருக்கும் வழங்கப்படவில்லை. முறைகேடாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நபா்கள் குறித்து பொதுமக்கள் ஒசூா் மாநகராட்சிக்கு அலுவலக தொலைபேசி எண் 04344-247666 வாயிலாக உடனடியாக புகாா் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் நபா்கள் மீது காவல் துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றாா்.