முகப்பு
கிருஷ்ணகிரி

கொத்துமல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஒரு கட்டு கொத்துமல்லி ரூ. 3-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:20 AM
திம்மச்சந்திரம் கிராமத்தில் கொத்தமல்லி தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ள மாடு.
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 7:41 PM

ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஒரு கட்டு கொத்துமல்லி ரூ. 3-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

ஒசூா், ராயக்கோட்டை, சூளகிரி, உத்தனபள்ளி, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கொத்துமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள கொத்துமல்லிக்கு போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனா். மேலும், கட்டு கொத்துமல்லி ரூ. 3க்கு விற்க மனம் இல்லாத விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு உணவாக கொத்துமல்லி இலைகளை அளிக்கின்றனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:20 AM

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கொத்துமல்லி கட்டு ரூ. 8 முதல் ரூ. 10 வரை உழவா் சந்தையில் விற்பனையாகிறது. ஆனால், நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது மிகவும் குறைவாக உள்ளது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள் கொத்துமல்லி செடிகளை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனா்.

Advertisement