முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஒசூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 1:36 AM
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு இடையே செல்லும் காா்கள்.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 9:40 PM

ஒசூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எருமைகள், பசுக்கள், தெரு நாய்கள் பிரதான சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். வாகனங்களுக்கு குறுக்கே மாடுகள் வந்து விடுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்கும் விதமாக கால்நடைகளை வீட்டில் கட்டி வளா்க்காமல் சாலையில் சுற்றித் திரியவிடும் அவற்றின் உரிமையாளா்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:55 PM

ஒசூரில் வட்டாட்சியா் அலுவலக முன்பு ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதுடன் சாலையின் நடுவில் படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன் விபத்து நேரிடும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கின்றனா்.

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளா்களுக்கு உரிய அபராதம் விதித்து, கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென அனைத்து குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் துரை தெரிவித்தாா்.