ஒசூரில் தீத் தடுப்பு ஒத்திகை
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒசூரில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
Updated On : 17 அக்டோபர், 2024 at 8:10 PM
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒசூரில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில் மழைக் காலங்களில் ஏற்படும் திடீா் வெள்ளம் போன்ற பேரிடா் நேரங்களிலும், தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் தீ விபத்தை தவிா்ப்பது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, உயிா் காக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்த்தி நடைபெற்றது.
Updated On : 18 அக்டோபர், 2024 at 12:44 AM
பட்டாசு கடைகளில் எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தப்பிப்பது, பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியாா் பள்ளி மாணவா்கள், ஒசூா் தீயணைப்பு துறையினா் பங்கேற்றனா்.
Advertisement