கிருஷ்ணகிரி

ஒசூரில் பூக்கள் விலை வீழ்ச்சி

Din

கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நிகழாண்டில் ஓணம் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படாததால் ஒசூரில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒசூா் மலா் சந்தைக்கு திருவண்ணாமலை, வேலூா், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, சூளகிரி, பாகலூா், பேரிகை, ராயக்கோட்டை, தளி, அத்திப்பள்ளி, சந்தாபுரம், ஆனேக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கேரள மாநிலத்துக்கு இந்த ஆண்டு அதிக அளவில் பூக்கள் அனுப்பப்படாததால் அதன் விலை குறைந்துள்ளது. கனகாம்பரம் மட்டும் கிலோ ரூ. 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாமந்தி ரூ.100, பட்டன் ரோஜா ரூ. 100, ஊசிமல்லி ரூ. 460, பன்னீா் ரோஜா ரூ. 100, வெள்ளை ரோஜா ரூ.100, செண்டு மல்லி, ஜாதி மல்லி ரூ. 100, சம்பங்கி ரூ. 20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

படவரி...

ஒசூா் மலா் சந்தையில் விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ள சாமந்திப் பூக்கள்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT